Geological Survey and Mines Bureau

நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதற் பக்கம் சேவைகள் சுரங்க அகழ்வு சேவைகள் அனுமதிப் பத்திரம் மற்றும் ஒழுங்கு விதிகள்

அனுமதிப் பத்திரம் மற்றும் ஒழுங்கு விதிகள்

அனுமதிப் பத்திரம் பற்றிய தகவல்கள்
1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுரங்கம் மற்றும் கனிய வளங்கள் பற்றிய சட்டத்தின்கீழ் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகமானது மூன்று விதமான அனுமதிப் பத்திரங்களை வழங்குகின்றது. அவையாவன, ஆய்வு, அகழ்வு மற்றும் வியாபாரமும் போக்குவரத்தும் என்பனவாகும். இந்த அனுமதிப் பத்திரங்கள் பற்றிய தகவல்கள் பின்வருமாறு:

ஆய்வு அனுமதிப் பத்திரம் (EL)
ஆய்வு அனுமதிப் பத்திர உரிமையாளருக்கு அந்த அனுமதிப் பத்திரத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ள வகையைச் சேர்ந்த சகல விதமான கனியங்கள் தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன.

அகழ்வு அனுமதிப் பத்திரம்
ஆடீஷியன் (AML)

பத்து ஹெக்டயார் நிலப்பரப்பிற்கு மேற்படாத பிரதேசத்தினுள் 25 மீற்றர் வரையிலான ஆழம் வரையில் அகழ்வு பணிகளை மேற்கொண்டு அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கனிய வகைகளையும் பொதி செய்வதற்கும், வியாபாரம் செய்வதற்குமான பூரண அதிகாரம் இந்த அனுமதிப் பத்திரதாரருக்கு வழங்கப்படுகின்றது.

Aவகை - பின்வரும் நிபந்தனைகளில் ஒன்று அல்லது அதற்கு அதிகமானவை உள்ளடக்கப்படல் வேண்டும்.

  • நிலத்தில் துளைக்கும் ஆழம் 1.5 மீற்றரை விடவும் குறைவாக இருத்தல் வேண்டும்;
  • ஒரு மாதத்தின் உற்பத்தி கனஅளவு 100 கன மீற்றரை விடவும் குறையாத அல்லது 600 கன மீற்றருக்கு கூடுதலாகவும் இருக்கக் கூடாது;
  • இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது.

B வகை - பின்வரும் நிபந்தனைகளில் ஒன்று அல்லது அதற்கு அதிகமானவை உள்ளடக்கப்படல் வேண்டும்.

  • நிலத்தில் துளைக்கும் ஆழம் 1.5 மீற்றரைவிடவும் குறைவாக இருத்தல் வேண்டும்;
  • ஒரு மாதத்தின் உற்பத்தி கனஅளவு 100 கன மீற்றரைவிடவும் அதிகரிக்கக் கூடாது;
  • இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாது.

ஆடிஷியன் அகழ்வு அனுமதிப் பத்திரம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள எவ்வாறு விண்ணப்பிப்பது?
புதிய ஆடிஷியன் அகழ்வு அனுமதிப் பத்திரம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளத் தேவையான ஆவணங்கள்.

  1. விண்ணப்பப் படிவம்.
  2. காணி உறுதியின் பிரதி.
  3. காணி வரைப்படத்தின் பிரதி (கட்டாயம் இல்லை)
  4. விண்ணப்பதாரி காணியின் உரிமையாளர் இல்லாதபோது காணியின் உரிமையாளரிடம் பெற்றுக்கொண்ட சத்தியக் கடதாசி அல்லது குத்தகை ஒப்பந்தத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.

சேர்ம கனிய வகைகள் (RML)
சேர்மக் கனிய வகைகளின் ஆய்வு, அகழ்வு, பொதியிடல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை அமைச்சரின் அனுமதியுடன் வழங்க முடியும்.

வர்த்தக அனுமதிப் பத்திரம்
அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கனிய வகைகளை கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல், பொதி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பணிப்பாளரின் விசேட அனுமதியின்மீது கனியப் பொருட்களை இறக்குமதி செய்தல் என்பவற்றிற்கு பூரணமல்லாத அனுமதி இந்த அனுமதிப் பத்திரத்தின் மூலம் வழங்குதல் வேண்டும்.

A வகை - ஏற்றுமதிக்கான கனிய வள வியாபாரம்.

B வகை - கனிய வளங்களை உள்நாட்டில் விற்பனை செய்தல்.

C வகை - கையால் உற்பத்தி செய்யும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு வியாபாரம்.

புதிய அனுமதிப் பத்திரம் ஒன்றிற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?
தேவையான ஆவணங்கள்

  1. முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்
  2. மண்ணை குவித்து வைக்கும் காணியின் உறுதி, மற்றும் வரைபடம்.
  3. விண்ணப்பதாரி காணியின் உரிமையாளர் இல்லாதபோது காணியின் உரிமையாளரிடம் பெற்றுக்கொண்ட சத்தியக் கடதாசி அல்லது குத்தகை ஒப்பந்தத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
  4. அகழ்வு உரிமையாளரிடம் பெற்றுக்கொண்ட உரிய கடிதங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
  5. அகழ்வு அனுமதிப் பத்திரத்தின் பிரதி.

கைத்தொழில் அகழ்வு அனுமதிப் பத்திரம் (TDL)
கைத்தொழில் அகழ்வு அனுமதிப் பத்திரமொன்றின் மூலம், அங்கு குறிப்பிடப்படும் பிரதேசத்தினுள் அனைத்து விதமான கனிய வகைகள் தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொள்ளல், அகழ்வு பணிகள், பொதியிடல் மற்றும் விற்பனை செய்வதற்காக பூரண அனுமதி கிடைக்கப் பெறுகின்றது. கைத்தொழில் அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் மூன்று வகைப்படும்.

A வகை - (அனுமதிப் பத்திர வகைகள் ஒன்று அல்லது அதற்கு அதிகமானவை)

  • வெடிக்க வைக்கும் முறை – தனித் துளைப்பு
  • துளைப்பின் ஆழம் - 3.0 மீற்றரிலும் அதிகமான
  • உற்பத்தி அளவு – ஒரு மாதத்தில் 1500 கன மீற்றரிலும் அதிகமான
  • பயன்படுத்தக் கூடிய இயந்திர சாதனங்கள் - டிரெக், ட்ரில், ஜெக் ஹெமர், ரொக் பிரெக்கர், பிரன்ட் அன் லோடர்ஸ் மற்றும் ஏனைய இயந்திர சாதனங்கள்

B வகை - (அனுமதிப் பத்திர வகைகள் ஒன்று அல்லது அதற்கு அதிகமானவை)

  • வெடிக்க வைக்கும் முறை – தனித் துளைத்தல்
  • துளைப்பின் ஆழம் - 1.5 மீற்றரிலும் குறையாத மற்றும் 3.0 மீற்றரிலும் கூடாத
  • உற்பத்தி அளவு – ஒரு மாதத்தில் 600 கன மீற்றரிலும் குறையாத மற்றும் 1500 கன மீற்றரிலும் கூடாத
  • ஜெக் ஹெமர் மாத்திரம் பயன்படுத்த முடியும்.

C வகை - (அனுமதிப் பத்திர வகைகள் ஒன்று அல்லது அதற்கு அதிகமானவை)

  • வெடிக்க வைக்கும் முறை – தனித் தகடு மற்றும் துளைத்தல்
  • துளைப்பின் ஆழம் - 1.5 மீற்றரிலும் குறைந்த
  • உற்பத்தி அளவு – ஒரு மாதத்தில் 600 கன மீற்றரிலும் குறைவாக இருத்தல் வேண்டும்.
  • ஜெக் ஹெமர் மாத்திரம் பயன்படுத்தல் வேண்டும்.

கைத்தொழில் அகழ்வு அனுமதிப் பத்திரம் ஒன்றிற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?
தேவையான ஆவணங்கள்

  1. விண்ணப்பப் படிவம்.
  2. காணி உறுதியின் பிரதி.
  3. காணி வரைபடத்தின் பிரதி (கட்டாயம் இல்லை)
  4. விண்ணப்பதாரி காணியின் உரிமையாளர் இல்லாதபோது காணியின் உரிமையாளரிடம் பெற்றுக்கொண்ட சத்தியக் கடதாசி அல்லது குத்தகை ஒப்பந்தத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
  5. பொருளாதார பலத்தின் தொழிற்பாடு பற்றிய அறிக்கை.

போக்குவரத்து அனுமதிப் பத்திரம்
கனியப் பொருட்கள் அடங்கிய வளம் அல்லது கனிய வளங்கள் என்பவற்றை கொண்டுசெல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதுடன் கனியப்பொருட்களின் அளவு, கொண்டுசெல்வதற்கான காலம் என்பவற்றை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடல் வேண்டும்.
சகலவிதமான ஆய்வுகள், அகழ்வுகள் மற்றும் விற்பனை அனுமதிப் பத்திரங்களுக்காக கனியப் பொருட்கள் அல்லது கனிய வளங்களை கொண்டு செல்வதற்காக போக்குவரத்து அனுமதிப்பத்திரம் ஒன்றும் காணப்படுதல்வேண்டும்.

புதிய அனுமதிப் பத்திரம் ஒன்றிற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?
தேவையான ஆவணங்கள்

  1. முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்.
  2. TPL அட்டை.
  3. அகழ்வு அனுமதிப் பத்திரதாரரின் விருப்பக் கடிதம்.

கனியப் பொருட்களை ஏற்றுமதி செய்தல்
சகலவித ஆய்வு, அகழ்வு மற்றும் வியாபார அனுமதிப்பத்திரம் இருக்கும் பட்சத்தில் கனிய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்தின் விசேட அனுமதியினை பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

Last Updated ( Tuesday, 23 June 2015 04:39 )  

முதன்மைப் பட்டியல்