இதுவரையில் சுரங்க அகழ்வு அலகானது 12 பிரதேசங்களில் செயற்படுகின்றது. பல்வேறுவிதமான சுரங்க அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்தசேவையொன்றினைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு அந்தப்பிராந்திய அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுரங்கம் மற்றும் கனிய பொருட்கள் சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஊடாக சட்ட விரோதமான அகழ்வு நடவடிக்கைளுக்கு எதிராக செயற்படும் பொருட்டு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பிரிவின் பிரதான பணிகளாக அமைவது,
எமது சேவைகள்
- சுரங்கங்களை பரீட்சித்தல் (நடமாடும் சேவை – அனுமதிப்பத்திரம் வழங்கள், தொழிநுட்ப ஆலோசணை வழங்கள்)
- நிபுணத்துவ சேவைகள் (உடைத்தல் பணிகளை மேற்கொள்ளும் தொழிநுட்ப முறைகள், அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல், சுரங்கப்பாதுகாப்பு முறைமைகள், பரீட்சித்துப்பார்ப்பதற்காக வெடிக்கவைக்கும் நடவடிக்கைகள், வெடிப்புக்கள் மற்றும் கீறல் போன்ற ஆய்வுப் பணிகள்.)
- விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் (அனுமதிப்பத்திர உரிமையாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள், சுரங்க அகழ்வுத் துறையில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கான செயலமர்வுகள் மற்றும் கல்விக் கண்காட்சிகள்.)
- சூழல் புனரமைப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் (சூழலை பாதுகாப்பதற்காக சுரங்க அகழ்வு பணியை மேற்கொள்வோரை ஊக்குவித்தல், சுரங்க அகழ்வுகளை மேற்கொள்வோரினால் கடைபிடிக்கப்படுகின்ற சூழல் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு தொழிற்பாடுகளைக் கண்காணித்தல்.)