2010 ஆம் ஆண்டிற்கான வருடாந்த தொழிற்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1:100,000 அளவிலான புவியியல் வரைபடங்கள் கொழும்பு, இரத்தினபுரி வரைபடங்களை (வரைபடம் 13) தரமுயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளிக்கள கற்கை, பாறைகளின் மாதிரிகளில் பாறை ஆய்வு மற்றும் இரசாயன பகுப்பாய்வு பணிகளை மேற்கொள்ளும் பணிகள் பற்றி நூல்களைத் தயாரித்தல் என்பன அந்த வேலைத்திட்டங்களில் அடங்கும். இலங்கையின் உயர்நிலம் தாழ்நிலம் என்பன எல்லைகளை சரியாக குறித்தல் என்பன இதன் பிரதான பணிகளாகும்.
பாறைகள் பற்றிய ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. அது பற்றிய விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஏனைய எல்லைகளுடன் அதன் தொடர்புகள் பற்றியும் அவற்றின் இரசாயன மற்றும் கனியவள, நிலநடுக்கத் தன்மை என்பனவும் இந்த ஆய்வுகளில் அடங்கும்.