சேவைகள்
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பகுப்பாய்வுகூடம் என்பது இலங்கைக்கு சிலிக்கேட்டு பகுப்பாய்வு முறையினை அறிமுகப்படுத்திய முன்னோடி ஆய்வுகூடம் ஒன்றாகும். ஐந்து தசாப்தத்திற்கும் அதிகமான காலம் முழுவதும் நாம் இலங்ககையின் கைத்தொழில் துறைக்கும், விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சித் துறைக்கும் பாரிய சேவையொன்றினை வழங்கியுள்ளோம்.
எமது ஆய்வுகூடத்தினால் பாறைகள், கனியங்கள், இரும்பு உலோகக்கரு, நிலத்து நீர், கைத்தொழில் மூலப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை அளவு ரீதியாக இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துவதுடன், இதற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகள் மற்றும் தரங்கள் என்பனவும் பயன்படுத்துகின்றோம். மேலும் போட்டித் தன்மைமிக்க, இலாபகரமான விலையில் இதனை பெற்றுக்கொடுக்கின்றோம்.
பிரதான பணிகள்:
பின்வரும் துறைகளுக்காக அடிப்படை மற்றும் முன்னேற்றகரமான பகுப்பாய்வினை பெற்றுக்கொடுக்கின்றோம்:
- கனியம் சார்ந்த கைத்தொழில் துறைக்கான மூலப் பொருட்களை பகுப்பாய்வு செய்தல்.
- குடிநீர் மற்றும் கைத்தொழில் துறைக்கான நீர் வழங்கலின் தரத்தினை நிர்ணயித்தல்.
- புவி இரசாயனவியல் நிலவரைப்படங்களை வரைதல் மற்றும் ஆராய்ச்சி செயற்திட்டங்கள்.
- சூழலியல் தர மதிப்பீடு.
இந்த ஆய்வுகூடமானது பல்கலைக்கழக மாணவர்கள், பட்டப்பின்படிப்பு மாணவர்கள், அரச விஞ்ஞான நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான பயிற்சிபெறும் நிலையமொன்றாகவும் விளங்குகின்றது.
பயன்படுத்தும் முறைமைகள் மற்றும் உபகரணங்கள்
மாதிரிகளை தயாரித்தல்
- டங்ஸ்ட்டன் காபைட் அரைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி கழிவுப் பொருட்கள் வராதவாறு மாதிரிகளை தூளாக்கல்.
- வழமையான சிலிக்கேட்டு பதனழிவு முறைமைகள், நவீன நுண்ணலை பதனழிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி மாதிரிகளை சிதைவுறச் செய்தல்.
- கதிர் மீள்ஒளிகாலும் பகுப்பாய்விற்குத் (XRF) தேவையான சுருள் தயாரிப்பு – Katanax உபகரணம் (KAtanax Flnxer) என்பன உபயோகித்து
பகுப்பாய்வு
கழியூதா கதிர்கள் - கட்புல வர்ணங்களின் பிரகாச அளவை மற்றும் செல்வழி பகுப்பாய்வின் மூலம் ப்ளோரைட், குளோரைட், பொஸ்பேட் மற்றும் நைடேமட் போன்றன பற்றிய பகுப்பாய்வுகளை மேற்கொள்ளல்.
கிரனைட், ஹைட்ரைட் பிறப்பாக்கியுடன் அணுசக்தியினூடான வர்ண ஒளியூட்டல் (AAS) பயன்பாட்டின் மூலம் பிரதான நுண் மற்றும் அரிதான 25 இற்கும் அதிகமான மூலப்பொருட்களுக்கான பகுப்பாய்வினை மேற்கொள்ளல். மூலப் பொருட்கள் பலவற்றிற்கு வீத மட்டத்திலிருந்து ஒரு பில்லியனுக்கு ஒன்று என்ற மட்டம் வரையில் பகுப்பாய்வுகளை மேற்கொள்ள முடியும்.
வெப்பமானி, PH மீற்றர், கரைம ஒட்சிசன் அளவை, ஊடுகடத்தல் அளவை, உப்பு அளவை என்பன ஆய்வுகூடத்திடல் காணப்படும் ஏனைய அடிப்படை கருவிகளாகும்.
நாம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?
நம்பகத்தன்மை | : | வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மைமிக்க பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுக்கொடுத்தல். |
பிழையற்றதன்மை | : | நவீன தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்தி நிபுணத்துவம் பெற்ற பணியாளர்களினால் பகுப்பாய்வுகளை மேற்கொள்வதனால் நாம் நமது அறிக்கைகளின் சரியான தன்மைப் பற்றி உறுதியளிக்கின்றோம். |
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பட்டியல்:-
எமது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பகுப்பாய்வுகளை செய்துகொள்ள முடியும்.
Package | Constituent determined | Fee (Rs. Without Vat.) | ||
01. | Silicate and Mineral Sand analysis | SiO2,Al2O3,FeO,Fe2O3, MnO,P2O5,TiO2,CaO, MgO,Na2O,K2O,H2O-, LOI | For complete analysis For one constituent For additional constituent Trace element Additional element |
6000/= |
02. | Water and Soil analysis | PH, conductivity, total hardness, alkalinity, total dissolved solids, Suspended solids, colour, SiO2, Fe++, Ca++,Mg++, Na+,K+,Cl-, SO4-2, PO4- ,NO3 | For complete analysis For one constituent For additional constituent Trace element Additional element Colour PH E.Condactance |
4500/= 600/= 400/= 1000/= 700/= 225/= 225/= 225/= |
03. | Industrials minerals (dolomite, calcite, limestone) | SiO2,Al2O3,FeO,Fe2O3, MnO,P2O5,TiO2,CaO, MgO,Na2O,K2O,H2O-, LOI | For complete analysis For one constituent For additional constituent Trace element Additional element |
4500/= 1000/= 600/= 1500/= 800/= |
04. | Iron Ore | SiO2,Al2O3,FeO,Fe2O3, MnO,P2O5,TiO2,CaO, MgO,Na2O,K2O,H2O-, LOI | For complete analysis For one constituent For additional constituent Trace element Additional element |
6000/= 1500/= 750/= 1500/= 1000/= |
05. | Graphite | Carbon, Ash, Volatile, Moisture |
Carbon and Ash Volatile Moisture |
1500/= 800/= 300/= |
06. | Miscellaneous | For one constituent For additional constituent Trace element Additional element |
1500/= 750/= 2000/= 1500/= |
|