சக்திமிக்க துளைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னோடி நிறுவனமாக காணப்படுவது புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகமாகும். கனிய ஆய்வுப் பணிகள், சுரங்க அகழ்வுப் பணிகள், நீர்த் தேக்கங்கள் /ஏறி/சுரங்கப் பாதை/ மற்றும் கட்டட அத்திவாரம் என்பன தொடர்பான நுண்ணாய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது நிபுணத்துவமிக்க முறையில் வலுவான துளைப்புச் சேவைகளினை நாம் வழங்குகின்றோம். பிரித்தானிய (BR) மற்றும் அமெரிக்க (ASTM) தரங்களுக்கேற்ப நாம் துளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மண் மற்றும் பாறைகளின் கருப்பொருளின் 90% வீதத்திற்கும் அதிகமான அளவொன்றினைப் பெற்றுக்கொள்ள எமக்கு ஆற்றல் உள்ளன.
துளைப்பு வகைகள் | தொகுதி | குறிக்கோள் | துளைத்த உச்ச ஆழம் |
துளைப்பு | கை இயந்திர பாவனை மூலம் | கனிய ஆய்வு, அத்திவாரம் பரீட்சித்தல் என்பவற்றிற்கு கலந்த, தளர்ந்த மண் மாதிரிகளை பெற்றுக்கொள்ளல் | 15m |
மின்சார இயந்திர பாவனை மூலம் (மிக விரைவில் ஆரம்பிக்க உள்ளது) | முக்கியமாக மேற்பாகத்தில் மேற்கொள்ளப்படும் கனிய ஆய்வுகளுக்கு கலந்த, தளர்ந்த மண் மாதிரிகளை பெற்றுக்கொள்ளல் |
30m |
|
மேற்பாகத்தினுள் (மண்) மென்மையான துளைப்பு | கலக்காத மண் மாதிரிகளைப் பெற்றுக் கொள்வதற்காக | பரிசோதனை, மற்றும் | 50m |
வைர மென் துளைப்பு | HX,NX,BX அளவுகள் | கனிய ஆய்வுகள், அத்திவாரம் பரீட்சித்தல் என்பவற்றிற்கு கலக்காத பாறைகளை மிகவும் சரியான முறையில் பெற்றுக்கொள்ளல் | 100m 300m 500m |
எம்மால் துளைக்கப்பட்ட ஆழம் கூடிய துளைப்புத் துவாரங்கள் புத்தளம் மாவட்டத்திலுள்ள பாறையினுள் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன் ஆழம் சுமார் 450 மீற்றராகும். தற்போது இதைவிடவும் ஆழத்திற்குத் துளைப்பதற்கான ஆற்றல் எமக்குள்ளது.
எமது துளைத்தல் வரலாற்றிலே முக்கியமான நான்கு சந்தர்ப்பங்கள் கீழே குறிப்பிடப்படுகின்றன.
கனிய ஆய்வு
இரும்புத் தாது மற்றும் செப்பு மண்வகை (சேருவிளை), இரும்புத் தாது (பனிரெண்டாவ, விலகெதர) சுண்ணாம்புக் கல் (அருவக்காலு), எபடைட் (எப்பாவளை), மேற்பட்டை ( ஆடிகம), தப்போவ, பல்லம.
பொறியியல் சார்ந்த புவிச்சரிதவியல் நுண்ணாய்வு
மொரகஹகந்த, குக்குலே கங்க, சமனலவௌ, மேல் கொத்மலை போன்ற கருத்திட்டங்களின் நீர்த் தேக்கங்கள், சுரங்கப் பாதைகள் மற்றும் நீர் வெளியேற்றும் வழி என்பவற்றிற்கு
கை இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளல்
கொயொலின், உருளை களிமண் போன்றன தொடர்பான கனிய ஆய்வுகளை மேற்கொள்ளல். (தெதியவல, மிட்டடியாகொட, பிலியந்தலை மற்றும் ஏனைய இடங்கள்)
|
|
![]() |