இது புவிச்சரிதவியல், அகழ்வுப் பொறியியல் பிரிவினால் கனிய முதலீட்டாளர்களுக்கு தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான சேவையொன்றாக தொழிற்படுகின்றது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் கனியப் புலனாய்வுப் பிரிவினால் ஏற்றுமதிக் கனிய வகையொன்றான திரிகைக் கல், காரீயம், கனிய மணல் மற்றும் அழகுசாதன பாறைக் கற்கள் என்பவற்றின் ஏற்றுமதியினை முறையாக மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள், அதனுடன் தொடர்புடைய உரிய தகவல்கள் என்பன பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்தப் பணிகளை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
- கனிய ஆய்வுகள் மற்றும் ஏற்றுமதிகள் என்பவற்றின் பிரகாரம் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக புதிய கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்ற முதலீட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- கனிய ஆய்வுகளுக்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்குத் தேவையான அறிவுரைகள் (வுழுசு) மற்றும் அந்த முன்மொழிவுகளை மதிப்பிடல் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
- கனிய வகைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு விளக்குதல், செயற்திட்ட முன்மொழிவுகளை தயாரிக்கும்போது தேவைப்படும் தகவல்கள் (வுழுசு) மற்றும் செயற்திட்ட முன்மொழிவுகளை மதிப்பீடு செய்தல் என்பன இடம்பெறுகின்றன.
- கனிய வகைகளை ஏற்றுமதி செய்வதுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களைத் தயாரித்தல் மற்றும் விழிப்பூட்டல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறே முதலீட்டாளர்களினால் வழங்கப்படுகின்ற கனிய ஆய்வுகள் மற்றும் ஏற்றுமதி கைத்தொழில் செயற்திட்ட முன்மொழிவுகள் என்பன தொடர்பான முன்னேற்றம், பௌதீக கணக்கெடுப்பு என்பவற்றினை மேற்கொண்டு அது பற்றி அமைச்சின் உரிய அதிகாரிகளுக்கு விளக்கும் பணிகளும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் அடங்கும்.