Geological Survey and Mines Bureau

நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதற் பக்கம் சேவைகள் நில சேவைகள் பூகம்பம் பற்றிய தகவல்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கை நிலையம்

நிலநடுக்கத் தரவுகள் மற்றும் சுனாமி கண்காணிப்பு நிலையம்

பிரதான குறிக்கோள்
2004 திசெம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்ற துக்ககரமான சுனாமி நிகழ்வின் பின்னர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தினுள் நிலநடுக்கத் தரவுகள் மற்றும் சுனாமி கண்காணிப்பு நிலையம் என்பன நிறுவப்பட்டன. இதன் ஒரு பிரதான குறிக்கோளாக அமைவது இந்து சமுத்திரத்தில் ஏற்படுகின்ற சுனாமி நிலைபற்றி மக்களுக்கு உரிய நேரத்தில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதாகும். இதற்காக பள்ளேகெலயில் அமைந்துள்ள நிலநடுக்க அளவை நிலையத்திடம் இருந்தும், வலயத்தின் ஏனைய 10 நிலையங்ளில் இருந்தும் கிடைக்கப்பெறும் தரவுகளின் பகுப்பாய்வின் மூலம் தகவல்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் கொகொஸ், தியாகோ, காஷியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள நிலநடுக்க அளவை நிலையங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தரவுகள் மற்றும் ஏனைய இணைய தகவல்களினை அடிப்படையாகக் கொண்டு முன் எச்சரிக்கை அறிவித்தல்கள் விடுக்கப்படும். குறித்த நிலநடுக்க நிலையினை உறுதிசெய்துகொள்வதற்காக கலிபோனியா நிலநடுக்க வலையமைப்பு, அமெரிக்க புவிச்சரிதவியல் அளவை நிறுவகம் மற்றும் யப்பான் காலநிலை அவதான நிலையங்களின் தரவுகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

நிலநடுக்க தரவுகள் மற்றும் சுனாமி நிலையத்தின் 24 மணிநேர 011-2729227 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி நிலைகள்  பற்றிய தகவல்களைப் பொது மக்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும். சுனாமி தொடர்பாக அண்மைக் காலமாக கூறப்படுகின்ற வதந்திகள் தொடர்பாக உண்மைத் தன்மையினை அறிந்துகொள்வதற்காக இந்த நிலையத்தினூடாக பாரிய சேவையொன்று பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றது. அவ்வாறே மக்கள் தாம் அறிகின்ற நிலநடுக்க தகவல்கள் தொடர்பான தகவல்களை இந்த இலக்கத்தின் ஊடாகவே நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

பூகோள ரீதியான நிலநடுக்க நிலைகளை கண்காணிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் நிலநடுக்க அளவை மாணிகள் பலவற்றினைக் கொண்ட வலையமைப்பொன்று தேவைப்படுகின்றது. தற்போது நிறுவப்பட்டுள்ள சர்வதேச நிலநடுக்க அளவை மாணிகளின் வலையமைப்பு (GSN) உலகம் முழுவதிலும் நிலநடுக்க அளவை நிலையங்களை நிறுவியுள்ளது.


இலங்கையின் பள்ளேகெலயில் அமைக்கப்பட்டுள்ள நிலநடுக்க அளவை நிலையமானது இந்த வலையமைப்பின் ஒரு முக்கிய நிலையமாகும். இந்த நிலையமானது 2000 ஆம் ஆண்டிலே கலிபோனியாவின் சென்டியாகோ பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பின் கீழ் இலங்கையின் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் ஒருங்கிணைப்புடன் நிறுவப்பட்டது.

பள்ளேகெல நிலநடுக்க நிலையத்தில் தன்னியக்க முறையில் உபகரணங்களினால் அறிந்துகொள்ளப்படும் நிலநடுக்க தரவுகள் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்திற்கும், கலிபோனியாவின் சென்டியாகோ பல்கலைக்கழகத்தி;ற்கும் நொடிப்பொழுதில் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. 2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் பூகோள ரீதியான நிலநடுக்க நிலைகளை ஆய்வு செய்வதற்காக இந்த நிலையமானது பாரிய பணியாற்றி வருகின்றது.

நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உபகரணங்களில் 100 மீற்றர் ஆழம் வரையில் பாறையைத் தோண்டி அதன் அடியில் பொருத்தப்பட்டுள்ள 54000 பரந்த பரப்பளவினைக் கொண்ட நிலநடுக்க மாணி மற்றும் ½ மீற்றர் ஆழத்தில் பொருத்தப்பட்டுள்ள புருசுயுடுP – ஊஆபு – 37 வகையைச் சேர்ந்த நிலநடுக்கமாணியானது முக்கிய இடம் வகிக்கின்றது.


முழுமையாக அணு வெடிப்புக்களை தவிர்க்கும் ஒப்பந்த அமைப்புடன் (CTBTO) இலங்கையிலே கட்டியெழுப்பியுள்ள உறவுகளின்மீது புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் நிலநடுக்க மற்றும் சுனாமி பிரிவானது இந்த சர்வதேச நிருவனத்தின் ஒரு தரவு மையமாக செயற்படுகின்றது. இதற்கேற்ப வலயத்தில் அவ்வாறான நிலநடுக்க அளவை மற்றும் தரவு நிலையங்கள் 10 என்பவற்றுடன் நேரடி தொடர்பாடல் உறவுகளை பேணிவருவதற்கும், அதனூடாக தரவுகளை பரிமாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பேற்பட்டுள்ளது. இந்த சகல வசதிகளும் கிடைக்கப் பெற்றதன் பின்னர் தற்போது நிறுவனத்தின் சகல உத்தியோகத்தர்களுக்கும் நிலநடுக்க தரவு பகுப்பாய்வு பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

வலயத்தின் மற்றும் பூகோள நிலநடுக்க நிலையினை அவதானித்தல் மற்றும் ஆய்வு  என்பவற்றிற்காக ஜேர்மனியின் (GFZ) நிறுவனத்தின் தலைமையின் மேலும் பரந்த அளவிலான 02 நிலநடுக்கமாணிகளை நிறுவுவதற்காக தற்போது அனைத்து பணிகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

மேலும் குறுகிய தூர நிலநடுக்கமாணிகள் 04 இனையும் இலங்கையின் சிறிய அளவிலான நிலநடுக்கங்களை அளவிடுவதற்காக நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துப் பணிகளும் பூர்த்தியடைந்ததன் பின்னர் நிலநடுக்கத்தை இனங்காணல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் தொடர்பான பணியகமானது அதன் வினைத்திறன் மற்றும் கொள்திறன் என்பவற்றினைப் பயன்படுத்தி செயற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Last Updated ( Thursday, 02 May 2019 09:04 )  

முதன்மைப் பட்டியல்