சேவைகள்
கனிய ஆய்வு மற்றும் பாறை ஆய்வு சேவைகள் என்பவற்றை இலங்கைக்கு அறிமுகம் செய்து சுமார் ஐந்து தசாப்த காலமாக இது தொடர்பான முன்னோடிச் சேவையொன்றினை நாட்டிற்கு வழங்குவதற்கு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பாறை ஆய்வுகூடத்தினால் முடிந்துள்ளது.
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகளை பயன்படுத்தி பாறைகள், உலோக மண் வகைகள் மற்றும் ஏனைய நிலப்பரப்புக்களில் உள்ள கனிய கலவைகள், உறுப்பிழைவமைதி என்பன உயர் நம்பகத்தன்மைமிக்க விதத்தில் பெற்றுக்கொடுக்கப்படுவதுடன், நியாயமான விலைகள் இதற்காக அறவிடப்படுகின்றன.
பிரதான பணிகள்
பின்வரும் துறைகளுக்கு அடிப்படை மட்டம் மற்றும் வளர்ச்சி மட்டத்தைச் சேர்ந்த கனிய ஆய்வுகள் மற்றும் பாறை ஆய்வுகள் பற்றிய சேவைகளை நாம் வழங்கி வருகின்றோம் :
- புவிச்சரிதவியல் நிலவரைபடமாக்கல்/புவிச்சரிதவியல் ஆய்வுகள்/கனிய கண்டுபிடிப்பு சேவைகள்.
- கனிய துறைசார்ந்த கைத்தொழில் துறைக்கு கனிய மூலப் பொருட்கள் ஃ பரீட்சித்தல் பணிகள்
- பொது மக்களுக்கு பாறை மற்றும் கனிய மாதிரிகளை இனங்காணல், பெயரிடல் மற்றும் மதிப்பிடல்.
- பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கு ஆய்வுகூட பயிற்சிகளைப் பெற்றுக்கொத்தல்.
பயன்படுத்தும் முறைமைகள் மற்றும் உபகரணங்கள்
- நவீன 'லொஜிடெக்' பாறை வாள் வகைகள் மற்றும் செப்பனிடல் இயந்திரங்களைப் பயன்படுத்தி உயர் மட்டத்திலான பாறை மெல்லிய பக்கத்தோற்றம் மற்றும் செப்பனிடப்பட்ட பக்கத்தோற்றம் என்பவற்றை வழங்கல்.
- 'ஒலிம்பஸ்' பாறை விஞ்ஞான நுண்ணாய்வின் மூலம் அந்த மெல்லிய பக்கத்தோற்ற பகுப்பாய்வினை மேற்கொண்டு அந்தப் பொருட்களின் கனியக் கலவைகள், உறுப்பிழைவமைதி என்பவற்றினை நிர்ணயித்தல்.
- அந்த மெல்லிய பக்கத்தோற்றங்களின் நுண்ணாய்வு புகைப்படங்களை பெற்றுக்கொடுத்தல்.
- மணல், பாறைகள், இரும்புத் தாது போன்றவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள கனியத்தின் அளவு, பாரம், பொருட்களைப் பயன்படுத்தி பிரித்தெடுத்தல் (ஈர்ப்பாற்றல் முறைமை)
- 'ஐசொடைனமிக்' இலத்திரனியல் காந்த சக்தியின் மூலம் கனியத்தினை பிரிக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்தி பெரிய நிலப்பரப்பில் காணப்படும் பொருட்களின் கனியக் கூறுகளைப் பிரித்தெடுத்தல்.
- பிரித்தானிய தரத்திற்கேற்ப மணல், மண், கழி போன்றவற்றில் காணப்படும் நுட்பத்திற்கேற்ப கருத்திட்டங்களை நிர்ணயித்தல். அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் தரவுகள் அளவு வட்டம், திரண்ட வட்டம் என வகைப்படுத்தப்படும்.
- கனிய வகைகளின் பௌதீக மற்றும் வெளியீட்டுத் தன்மையினைப் பயன்படுத்தி அவற்றினை சரியாக இனங்காணல்.
- காபனேட் பாறை மற்றும் கழி வகைகளில் காணப்படும் கனியக் கூறுகளை வலுப் பகுப்பாய்வு முறைமையினைப் பயன்படுத்தி (DTA) இனங்காணல்.
எமது சேவைகள் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள்
உண்மைத்தன்மை : நிபுணத்துவமிக்க பணியாளர்களினால் நவீன உபகரணங்கள், முறைமைகள் என்பவற்றினைப் பயன்படுத்தி உண்மையான நம்பகத்தன்மைமிக்க அறிக்கையினைப் பெற்றுக்கொடுக்கின்றோம்.
வினைத்திறன் : இயன்றளவு மிகவும் குறுகிய காலத்தினுள் சிறந்த சேவையொன்றினைப் பெற்றுக்கொடுத்தல்.
இலாபகரமானது : எமது சேவையினை மிகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கின்றோம்.
நன்மதிப்பு : பாறை விஞ்ஞானம், கனிய விஞ்ஞானம் சார்ந்த பகுப்பாய்வு முறைகளுக்கு, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பாறை ஆய்வுகூடம் என்பது இலங்கையினுள் பெயர் பெற்ற ஆய்வுகூடமொன்றாகும்.