Geological Survey and Mines Bureau

நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதற் பக்கம் எம்மைப் பற்றி வரலாறு

வரலாறு

அமைப்பின் ஆரம்பம்
புதிதாக நிறுவப்பட்ட புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகமானது பல நூற்றாண்டு காலமாக இருந்துவந்த பல புவிச்சரிதவியல் திணைக்களங்களின் மறுவடிவமாகும். இந்த நிறுவனமானது 1930 ஆம் ஆண்டிலே கல்விமானாகிய ஆனந்த குமாரசாமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இலங்கை கனியவள ஆய்வுடன் தோற்றம் பெற்றது. வரலாறு பூராவும் இலங்கையிலே கனியவளங்களை கண்டுபிடித்தல், மேம்படுத்தல் மற்றும் தரவுகளை ஒன்றுதிரட்டல் என்பன தொடர்பான மிக முக்கியமன அறிக்கைகள் இந்த நிறுவனத்திடம் காணப்படுகின்றன. தற்காலத்தில் காணப்படுகின்ற கனிய வளங்கள் பற்றிய சகல கைத்தொழில்களும் இதன் பிரதிபலனாக தோற்றம் பெற்றவையாகும்.

இலங்கை கனியவள ஆய்வானது 1930 ஆம் ஆண்டிலே கனியவியல் திணைக்களமாக மாற்றம் பெற்று 1962 ஆம் ஆண்டிலே புவிச்சரிதவியல் அளவை திணைக்களமாக மீளப் பெயரிடப்பட்டது. 1993 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 18 ஆம் திகதி இந்தப் பணியகமானது 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுரங்கம் மற்றும் கனியப் பொருட்கள் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. அதனூடாக புவிச்சரிதவியல் அளவைப் பணிகளும் புதிய சுரங்கத் திணைக்களத்தின் பொறுப்புக்களும் ஒன்றிணைக்கப்பட்டன.

கனியவள அபிவிருத்தி பற்றிய முதன்மை நிறுவனமாக இந்தப் பணியகம் நிறுவப்பட்டமையால் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்களை நிறுவுவது அரசாங்கத்தின் பிரதான அர்ப்பணிப்பாக அமைந்துள்ளமை இதன் மூலம் தெளிவாகின்றது. கனியப் பொருட்கள், விலை கூடிய இறக்குமதிப் பொருட்களுக்குப் பதிலாக பதலீடுகளை வழங்குதல், கட்டட மற்றும் நிர்மாணக் கைத்தொழிலிற்குத் தேவையான பொருட்களை வழங்குதல், தொழில் வாய்ப்புக்கள் பிறப்பிக்கப்படுவதுடன் இதன் மூலம் நாட்டிற்கு வருமானமும் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. தேசிய புவிச்சரிதவியல் தரவு முறைமை ஒன்றினை பேணிவருதல் மற்றும் தகவல்களை பொது மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தல் போன்ற பொறுப்புக்களையும் இந்த நிறுவனம் நிறைவேற்றி வருகின்றது.


கலாநிதி ஆனந்த குமாரசாமி

பணியகத்தின் அமைப்புமுறை
இந்தப் பணியகத்திற்கு பிரதான நான்கு தொழிற்பாட்டுப் பணிகள் காணப்படுகின்றன. புவிச்சரிதவியல் நிலவரைபடங்களை தயாரித்தல், கனியவள ஆய்வுகள் (பிரதான பணி), சுரங்க அகழ்வு உரிமைகள் மற்றும் சுரங்க அகழ்வுகள் பற்றிய ஒழுங்கு விதிகள், சேவை பெறுநர்களுக்கு விருப்பமான பணிகள் (கனியவள பகுப்பாய்வு, ஆய்வுகூட சேவைகள், நில பௌதீகவியல் மற்றும் நிலத்துளைப்பு ஒப்பந்தங்கள்), மற்றும் புவிச்சரிதவியல் தகவல்கள் (வெளியிடப்பட்ட, வெளியிடப்படாத தகவல்கள் அடங்கிய நிலப்படங்கள் மற்றும் ஏனைய தமது நூலகத்தில் வைத்திருத்தல் என்பன)

Last Updated ( Thursday, 28 March 2019 05:50 )  

முதன்மைப் பட்டியல்