Geological Survey and Mines Bureau

நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதற் பக்கம் சேவைகள் நில சேவைகள் நிலப்படத்துறை அலகு

நிலப்படத்துறை அலகு

நிலப்படத்துறை

நிலப்படத்துறை அலகானது பணியகத்தின் ஒரு முக்கிய பிரிவாகும். புவிச்சரிதவியல் திணைக்களம் முதல் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் வரையில் 1993 ஆம் ஆண்டிலே இடம்பெற்ற மாற்றத்தின்போது நிலப்படத்துறை அலகு, புவிச்சரிதவியல் ரீதியான நிலப்படத்துறை வடிவமைப்பிற்கான புதிய உபகரணங்கள் என்பவற்றின் மூலம் பலப்படுத்தப்பட்டன. 1994 ஆம் ஆண்டிலே பிரித்தானிய புவிச்சரிதவியல் நிறுவனத்தின் தலைமையில் பணியகத்தினுள் மேற்கொள்ளப்பட்ட 1:100,000 அளவு முறைப்படியான வரைபடம் வரையும் நிகழ்ச்சித் திட்டமானது, அதன் இரண்டாம் கட்டம் வரையில் 1999 ஆம் ஆண்டிலே அவுஸ்திரேலிய நிதி மற்றும் தொழிநுட்ப உதவியின் (AusAID) கீழ் விருத்தி செய்யப்பட்டது. தற்போது பணியகத்தினுள் புவிச்சரிதவியல் சார்ந்த ஏனைய அனைத்து வரைப்படங்களும் பணியகத்திலேயே நிபுணர்களின் அறிவு மற்றும் கண்காணிப்பின் கீழ்  தயாரிக்கப்படுகின்றன.

தொழிநுட்ப முன்னேற்றத்துடன் அதற்கேற்ற விதத்தில் நிலப்படத்துறை அலகானது பின்வரும் வன்பொருள், மென்பொருள் என்பவற்றுடன் பயிற்றப்பட்ட பணியாட்டொகுதி ஒன்றையும் கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகின்றனர்.

தற்போது காணப்படும் GIS வன்பொருள்

  • Arc GIS - ver9.2
  • Microstation –V8XM Edition
  • Arcview –Version 3.2
  • MapInfo- Professional 5.5

உபகரணங்கள்

  • Calcomp Drawing board vi digitizers
  • HP Designjet 4500 scanner
  • HP Design jet Plotter (A0)
  • Lexmark C935 Colour Printer (A3)

Last Updated ( Wednesday, 03 April 2019 05:52 )  

முதன்மைப் பட்டியல்