புவி பௌதீகவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான இலத்திரனியல் எதிர்ப்பாற்றல் அளவை, எதிர்ப்பு உருவ உபகரணங்கள், அயக்காந்த அளவை, புவி வெளிப்படை போன்ற ரேடார் (GPR) மற்றும் புவிக்கடியில் நிறுவக்கூடிய முறைமைகள் (DGPS) என்பனவும் பணியகத்தின் புவி பௌதீகவியல் ஆய்வுகூடத்தில் காணப்படுகின்றன. கனிய ஆய்வு செயற்திட்டங்கள், புவிச்சரிதவியல் ரீதியான நிலவரைப்படங்கள் மற்றும் பொறியியல் சார்ந்த புவிச்சரிதவியல் தரவுகள் என்பவற்றிற்கு இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வுகூடத்தை சிறந்த முறையில் தரமுயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அதன் ஒரு அம்சமாக ஒளிக்கதிர் விளக்கஞ் செய்கின்ற நிலநடுக்க அளவை கருவியொன்றும், பிற சம்பந்தப்பட்ட கருவிகள் என்பவற்றினை ஆய்வுகூடத்திற்குப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிரதான புவி பௌதீகவியல் ஆய்வுகளில் வெல்லவாய, ரன்தெனிய சிவப்பு திரிகைக்கல் படிவத்திற்கும், புத்தலத்திற்கு அருகாமையில் அருவக்காலுவில் சுண்ணாம்புக்கல் படிவம் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட இலத்திரனியல் எதிர்ப்பாற்றல் அளவைகள் என்பன பிரதான இடம் வகிக்கின்றன.